கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் ஜீப்

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக சென்ற கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னாலுள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இந்த ஜீப் மோதியுள்ளது.

விபத்தில் மதில், ஜீப் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளதுடன் ஜீப் வண்டியை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.