கட்டுப்பாட்டை இழந்த ஜீப்: மூவர் பலி
இந்தியாவில் சாயங்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மண்டபசாலை பேரூந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள தேநீர் கடையில் நின்றிருந்த போது அதிவேகமாக வந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி ஜீப்பை விட்டு ஓடினார். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யும் வரை உடல்களை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சாரதியை ரெட்டிப்பட்டியில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்