கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

5 வேட்பாளர்கள் நேற்று திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 1,500 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்