கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன் கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்