கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்ததால் பெரும் தாமதம்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்திருந்த நிலையில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணி முதல் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் செயலிழந்திருந்த இந்த கணணி அமைப்பு மாலை 4.15 மணிக்கு மீண்டும் செயல்படுத்தப்பட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த செயலிழப்பின் போது, குடிவரவுத் துறையின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் இரண்டும் பாதிக்கப்பட்டன, இதனால் பயணிகளுக்கு பெரும் தாமதம் ஏற்பட்டது.