கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக 2 ஸ்கேனிங் இயந்திரங்கள்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் இன்று பிற்பகல் ரூ.50 மில்லியன் பெறுமதியான 2 ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
குறித்த நவீன இயந்திரங்களின் மூலம் தினமும் வருகை தரும் சுமார் 20,000 பயணிகளின் பயணப்பொதிகளை விரைவாகச் சோதனையிடுவதோடு, சுங்கத்தின் செயற்பாடுகளின் திறனும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இச்சாதனங்கள் பயணிகளின் பயணப்பொதிகளுக்குள் இருக்கும் பொருட்களை முப்பரிமாண (3D) படங்களாக உருவாக்கும் திறன் கொண்டவை.
புதிய ஸ்கேனர்கள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்ட நிகழ்வில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட பங்கேற்றார்.