கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடு

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலை பளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், சனநெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.