கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திர கருமபீடம் திறப்பு

நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில், பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை அணிமித்த பகுதிகளில் வாகனங்களை வாடகைக்கு பெறுகின்றவர்களுக்காக மாத்திரம் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த புதிய திட்டத்தின் கீழ்மோட்டார் சைக்கிள் ,முச்சக்கரவண்டி மற்றும் இலகுரக வாகனங்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும், கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.