
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 160 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 16 கிலோ குஷ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
