
கட்டுநாயக்கவில் கோடாவுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாது கங்கை ரம்ய தொடுபொல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின்போது மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 3,591,000 மில்லி லீற்றர் அளவுடைய கோடாக்கள் (19 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
