
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கைக்குண்டும் வாள்களும் மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இருந்து கை குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
