கட்டுநாயக்கவில் இரண்டு பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தின்பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவரிடமிருந்து 1.48 கிராம் குஷ் கஞ்சா, 2.44 கிராம் ஐஸ் மற்றும் 190 மி.கி ஹெராயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு 14 ஐச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு போதைப்பொருள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
மேலும் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
