கட்டார் வேலை வாய்ப்பு : மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
கட்டார் நாட்டில் வேலைபெற்று தருவதாக தெரிவித்து 600இ000 ரூபாய் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்