கட்டாக்காலி கால்நடைகளை இன்று முதல் கைப்பற்ற நடவடிக்கை

ஏறாவூர் நகர வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் ஆடு மாடுகள் இன்று சனிக்கிழமை தொடக்கம் நகர சபையினால் கைப்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்படும் மாடொன்றுக்கு 5000 ரூபாவும் ஆடொன்றுக்கு 2500 ரூபாவும் உரிமையாளர்கள் தண்டப் பணமாக செலுத்தி தமது கால்நடைகளை மீட்டுச் செல்லுமாறு ஏறாவூர் நகர சபை தெரிவித்துள்ளது.

மூன்று தினங்களுக்குள் கட்டாக்காலிகள் உரிமையாளர்களால் பொறுப்பேற்கப் படாத விடத்து அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.