கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது, என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு மேல் உள்ள மின் பாவனையாளர் உடனடியாக கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அத்தோடு, கட்டணம் செலுத்தாத நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் செலுத்த வேண்டிய மின் கட்டணப் பட்டியலின் முழுத் தொகையினையும் செலுத்துவதோடு, மீள இணைப்பதற்கான மேலதிக கட்டணம் 3000 ரூபாவும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP