அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை
அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 8 பேர் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இவ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதுடன் இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
விபத்து ஏற்பட்டு சில மணி நேரம் கழித்து அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
வெடிவிபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காக 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்