
கட்சிகளுக்கு இடையில் மோதல்: 6 பேர் பிணையில் விடுதலை
-அம்பாறை நிருபர்-
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்கள் தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி ஒத்திவைத்தார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றிருந்ததுடன் காயமடைந்தவர்களில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்