Last updated on April 11th, 2023 at 07:57 pm

உணவில் பூரான் :

கடையில் வாங்கிய உணவில் பூரான் : விரைந்து செயற்பட்ட சுகாதார துறையினர்

கடையில் வாங்கிய உணவில் பூரான் : விரைந்து செயற்பட்ட சுகாதார துறையினர்

-மன்னார் நிருபர்-

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வாங்கிய உணவில் பூரான் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விரைந்து செயல்பட்ட மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் கிடைக்கப்பெற்ற உணவு தொடர்பான முறைப்பாட்டையடுத்து, சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த உணவகத்துக்குச் சென்று உணவுகள் அனைத்தும் அழிக்கப் பட்டதுடன், கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு சமையலறையை உடனடியாக திருத்தி அமைப்பதற்குரிய வழிகாட்டலும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்