கடையினுள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கொஹுவல, சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

சரணங்கர வீதியிலுள்ள கடையின் உரிமையாளரான 43 வயதுடைய நபரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இதன் போது காயமடைந்த கடையின் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கான காரணம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்