கடைகளில் பொருட்களை வழங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணம்

சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், சிறப்பு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்காமல் அவற்றுக்கு விலை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார்.