
கடும் மழை காரணமாக மட்டு.கிரான் பாலம் ஊடான போக்குவரத்து தடை
-கிரான் நிருபர்-
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தொடர்ச்சியாக. பெய்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக கிரான் பாலம் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் கிரான் பாலம், புலிபாய்ந்தகல் பாலங்களுக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் தொப்பிக்கலை அக்குறானை மினிமித்தவெளி மற்றும் முறுத்தானை போன்ற கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது.
கிரான் பிரதேச செயலகத்துக்கு மற்றும் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், கிரான் பிரதேச செயலக செயற்பாடுகள் கோரகல்லிமடு பிரதேச செயலக விடுதியில் தற்காலிகமாக இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் இரண்டு நாட்களாக பொதுமக்களின் தேவைகளுக்காகவும் போக்குவரத்துக்காகவும், பிரதேச செயலகத்தினால் இயந்திர படகு சேவை இடம்பெற்று வருகின்றது.




