கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா – உடப்புசல்லாவ வீதி!

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது .

நுவரெலியாவில் இன்றைய தினம் காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் வீதியினை கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது

இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வோரும் கடுமையாக பாதித்து வருகின்றனர் .

இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .