கடும் பனிமூட்டம் : விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து
இந்திய தலைநகர் புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, புதுடெல்லியில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 110 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தலைநகர் புதுடெல்லி வரை இயக்கப்படும் 25 ரயில்களை ரத்து செய்ய உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைத் தவிர, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அடர்ந்த பனிமூட்டமான வானிலை நிலவுகிறது.
