கடுகன்னாவ மண்சரிவு -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் இருவர், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது .

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.