
கடுகண்ணாவ மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து
பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், கடுகண்ணாவ பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காகச் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான வீதி மூடப்பட்டிருப்பதால் மாற்று வழிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், பரீட்சார்த்திகள் வழமையை விட முன்கூட்டியே தங்கள் பரீட்சை நிலையங்களுக்குச் சமுகமளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து உதவி தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் 117 அல்லது 1911 என்ற துரித இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளமுடியும் என பரீட்சைகள் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
