கடிதங்கள் முச்சக்கர வண்டிகள் மூலம் விநியோகம்
தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தபால் திணைக்களத்திற்கு 4000 மில்லியன் ரூபாவால் நட்டம் குறைக்கப்படும் என அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு இந்த அமைச்சை வழங்கிய போது தபால் திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் சவாலை என்னிடம் ஒப்படைத்தார்.
2022 ஆம் ஆண்டில் தபால் சேவையின் வருமானம் ரூ. 7,000 மில்லியன் ஆகவும் செலவானது ரூ.14,000 மில்லியனாகவும் இருந்தது. உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தபால் திணைக்களத்தின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை ரூ. 7,000 மில்லியன் முதல் 4,000 மில்லியன் வரை கொண்டுவந்துள்ளோம். அஞ்சல் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.
2025 ஆம் ஆண்டில், திறைசேரியை நம்பியிருக்காத தபால் திணைக்களத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்” என இராஜாங்க அமைச்சர் பண்டார மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்