
கடவுளை காண காட்டில் உண்ணா விரதம்: 47 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் Good News International Church (குட் நியூஸ் இன்டர்நெஷ்னல் சேர்ச்) என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் மகென்சி என்தெங்கே என்பவர் வேறொரு உலகில் உள்ள கடவுளை காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் என்று பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இதை நம்பி அப் பகுதியை சேர்ந்த 15 பேர் கிளிஃபி காட்டிற்குள் சென்று உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இருந்துள்ளனர்.
இது குறித்த ரகசியத் தகவலை அறிந்த பொலிஸார் வனப்பகுதிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் 4 பேர் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் உண்ணாவிரதம் இருந்த காட்டுப்பகுதியை சோதனை செய்ததில் சமீபத்தில் புதைக்கப்பட்ட 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பாதிரியார் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகள் இறப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
