கடவுச்சீட்டு பிரச்சினைக்கு டிசம்பரில் தீர்வு

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்தமுறைமை நாளை மறுதினம் புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் எனவும் இந்த மாதத்திற்கான திகதி ஒதுக்கீடுகள் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் மாதத்திற்கான தின ஒதுக்கீடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்