கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசை

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ளதால் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

பிராந்திய காரியாலயத்தில் நாளாந்தம் 25 அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதவிர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான நடைமுறைகளை பின்பற்றாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்