கடல் வழியாக கடத்தப்படவிருந்த தங்கம்: இருவர் கைது

தலைமன்னாரில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.

கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க