கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ருமேனிய நாட்டு சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்பு!

கொட்டவில பகுதியில் உள்ள மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய 30 வயதுடைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார்.

நேற்று மாலை மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட அலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணியில் இருந்த பொலிஸ் உயிர்காப்பாளர்கள் ருமேனிய நாட்டைச் சேர்ந்த குறித்த சுற்றுலாப் பயணியை மீட்டனர்