கடலில் மூழ்கி காணாமல் போன 2 சிறுவர்கள்

பாணந்துறை கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன 2 சிறுவர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வத்தளை மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடையவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

பாணந்துறை கடலில் நேற்று புதன் கிழமை 5 பேர் நீராடச் சென்ற நிலையில், அவர்கள் அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

கடற்படை மற்றும், பொலிஸாரின் உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து குறித்த 5 பேரில் 3 பேரை மீட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்