
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு
நீர்கொழும்பு குடாப்பாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.
நீர்கொழும்பு கடற்கரை தெருவை சேர்ந்த யோகநாதன் நிதிஷ் (வயது -17), அஸரப்பா வீதியை சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் (வயது-17) ஆகியோரே உயிரிழந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
