கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு

 

பாணந்துறை கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை நீரில் மூழ்கிய நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்

12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்

கடலில் மூழ்கியவர்களை பாணந்துறை கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவினர் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.