
கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் உயிரிழப்பு
தலைமன்னாரில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தலைமன்னார் பகுதியை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
படகில் பயணித்துக்கொண்டிருந்த போதே, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார். ஏனைய மீனவர்களின் உதவியுடன் குறித்த மீனவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு, தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.
தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
