
கடலில் நீராடச் சென்ற ஒருவரை காணவில்லை
முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்பகுதி நீராடுவதற்கு பொருத்தமற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கு நீராடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரை தேடும் பணிகளில் சுழியோடிகள், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
