கடலில் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.
நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.