கடலில் தரித்திருந்த படகு மூழ்கி விபத்து: படகை மீட்க மக்கள் முயற்சி
-அம்பாறை நிருபர்-
இயந்திரம் உட்பட வலைகளுடன் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை – கல்முனை பிராந்திய கடல் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த படகானது கடற்கரைப்பகுதில் இருந்து 500 மீற்றர் தொலைவில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூழ்கிய படகு 65 லட்சத்துக்கும் அதிக பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த படகு கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Beta feature
