கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம் 22 நாட்களாக மாயம்

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் 22 நாட்களாக வீடு திரும்பவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு , வெல்லவீதிய மற்றும் தொடுவாவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில் ஒருவரின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில், 22 நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்காக சென்ற எனது மகன் ஜெரோம் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்தார்.

காணாமல் போனவர்களில் ஒருவரின் மகன் இது தொடர்பில் தெரிவிக்கையில், எனது தந்தை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று இன்றுடன் 22 நாட்களாகின்றன.அவர் இன்னும் வீடு திரும்பவில்லை , அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் எனது தந்தை மற்றும் அவருடன் சென்றிருந்த ஏனைய மீனவர்களையும் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.