கடற்றொழிலாளர்களர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வியாழக்கிழமை வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஏனைய பகுதிகளில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிலாபம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 முதல் 3 மீற்றர் வரை மேலெழக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்