கடற்பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை
காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணி தொடக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடுமையான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 – 3.0 மீற்றர் வரையில் கடல் அலைகள் அதிகரித்து வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதனால், மேற்கண்ட கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
காலியிலிருந்து புத்தளம் மற்றும் காங்கசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2.0 – 2.5 மீற்றர் வரையில் அலைகள் வீசுவதுடன் பலத்த காற்று மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை வீசும் சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே மேற்கண்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், காலியிலிருந்து கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்