கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இந்து சமயத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாக வரலாற்றில் பதிவாகின்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்