கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
இந்தியாவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த காமராஜர் காலனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
காமராஜர் பகுதியைச் சேர்ந்த தாய் கிர்த்திகா மற்றும் 11 வயது மகளும்இ 14 வயது மகனும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டனர்.
அரிசி ஆலை கூலித் தொழிலாளியான கணவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவுப் பணிக்குச் சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியபோது, மனைவியும் பிள்ளைகளும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
உயிரிழந்த பெண் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
