கடன் அட்டை பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில் 1,911,616 ஆக இருந்த கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது கடந்த ஏப்ரலில் 1,914,125 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் மட்டும் பணம் செலுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10,391 கடன் அட்டைகளும் சர்வதேச ரீதியான பாவனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட 1,903,735 கடன் அட்டைகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் கடன் அட்டைகளின் மொத்த நிலுவைத் தொகை 151,580 மில்லியன் ரூபா என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்