கடனை திருப்பி கேட்ட பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை

இந்தியாவில் சென்னையில் கடன் தவணையை உரிய நேரத்தில் கட்டுமாறு கேட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவி இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

காசிமேடு சிங்காரவேலன் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணை மீனவர் ஒருவர் தனது மனைவி பெயரில் வாங்கிய கடன் தவணை பற்றி கேட்டபோது அவரை இரும்பு ராடால் தாக்கியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குஙித்த பெண் சிகிச்சைக்குப் பின் மீனவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின் தலைவலி ஏற்பட்டு குறித்த பெண் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்