கடந்த 6 மாதங்களில் சுங்க வருவாய் அதிகரிப்பு!

 

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத்துறை 1 ட்ரில்லியன் ரூபாய் வருவாயை கடந்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் வருடாந்திர வருவாய் இலக்கான 2.115 ட்ரில்லியன் ரூபாயை எட்டுவதற்கு தயாராகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தற்போது வரை, சுங்கத்துறை வருவாய் 1 ட்ரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. மேலும் எங்களுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அரசாங்கம் நிர்ணயித்த முழு ஆண்டு இலக்கையும் நாங்கள் எட்டிவிடுவோம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.