கடந்த 2 ஆண்டுகளில் 17 சிறுவர்கள் கொடூரமான வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறையற்ற பாடசாலை சூழலை உருவாக்குவதற்கான ‘பாதுகாப்பான பாடசாலைத் திட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இதுவரை முறையான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிகாட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்