
கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆகும்.
