
கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
-பதுளை நிருபர்-
பதுளை எகொடவெல பகுதியில் 2800 மில்லிகிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, எகொடவெல, வத்தே கலே பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 55 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
எகொடவெல பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 47 வயதுடைய சந்தேக நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நபர் ஒருவர் பொலிஸாரிடம் தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து, பொலிஸாரை சுடுவேன் என மிரட்டியுள்ளார்
பின்னர் குறித்த நபர் தன் கைவசம் வைத்திருந்த துப்பாக்கியை எறிந்துவிட்டு தப்பி ஓடினார்.
பின்னர் குறித்த துப்பாக்கியையும் கைது செய்த மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது
தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதுளை பொலிஸாரிடம் வந்து சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
