கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

-பதுளை நிருபர்-

மொனராகலையில் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டு இருந்த 4 இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய மொனராகலை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் அவர்களிடம் இருந்து உலர்ந்த கஞ்சா போதைப்பொருள் 1 கிலோ 591 கிராம் கைப்பற்ற பட்டுள்ளது.

23, 23, 35, 28 வயதுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 4 சந்தேக நபர்களையும் இன்று புதன்கிழமை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்